கப்பற்சேதம்!

கப்பற்சேதம்!  •  Sermon  •  Submitted   •  Presented
0 ratings
· 9 views
Notes
Transcript

கப்பற்சேதம்!

அநேக நாளாய்ச் சூரியனையாவது நட்சத்திரங்களையாவது காணப்படாமல், மிகுந்தபொருங்காற்று மழையும் அடித்துக் கொண்டிருந்தடிடியினால், இனி தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கை முழமையும் அற்றுப் போயிற்று. (அப் 27.20)
அப்போஸ்தலர்கள் ஒரு நடபடிகளின் புத்தகம். தேவனுடைய கிரியைகள், பரிசுத்தாவியானவரின் கிரியைகள். அப்போஸ;தலுருடைய கிரியைகள், விசுவாச வீராpன் கிரியைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அடுத்த கோணத்தில் பார்ப்போமானால் சாத்தானுடைய கிரியைகளையும் கண்கூடாக காணலாம்.
ஒரு பெரிய தேவாலயத்தின் பகுதியிலெ அநேக நொண்டிப்பிசாசுகள், குருட்டுப் பிசாசுகள் என பெலவீனமான அநேக பிசாசுகள் காணப்பட்டன. ஆனால் ஒரு சிறு தேவாலயத்தைச் சுற்றி மிகவும் சக்தி வாய்ந்த பிசாசுகள் மிகவும் கவனமாக மிகுந்த ஆயத்தத்தோடு இருந்தனவாம். இவ்வாறாக சொப்பனம் கண்ட ஒரு தேவ மனிதனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பெரிய தேவாலயத்தை விட்டுவிட்டு ஏன் சிறிய தேவாலுயத்தின் மேல் பிசாசு கண்ணாயிருக்கிறான் என்ற சந்தேகம் எழும்பியது.
பரிசுத்தாவியானவர் அதன் இரகசியத்தை சுட்டிக்காட்டினார். வெளித்தோற்றத்தில் அந்த ஆலயத்தின் அளவையும், அதன் அலங்காரத்தையும் காண்கிறாய். ஆனால் சிறிய ஆலயமேயாயினும், அங்கேதான் ஜெபிக்கிற விசுவாசிகள் உண்டு. பரிசுத்த ஆவியானவரின் அபரீதமான கிரியையையும் அங்கே காணப்படுகிறது. ஆகவே சாத்தானின் கவனமும் அந்த சிறிய ஆலயத்தின் பக்கம் திரும்பி இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லையே.
நீ எதையேனும் சாதிக்கவிரும்பினால், குருக்கிடும் பிரச்சினைகளை நீ சந்தித்தே ஆகவேண்டும். செத்த மீன்களை வெள்ளம் அடித்துக் கொண்டு போகும். ஆனால் உயிருள்ள மீன்கள் எதிர் நீச்சல் செய்து தண்ணீர் ஓடும் திசைக்கு எதிராக செல்லும்.
அக்காலுத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. .. சிதறப் பட்டுப்போனார்கள். (அப் 8.1) சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். பயமுறுத்தப் பட்டார்கள். அடிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார்கள். இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். இவை அனைத்தோடும் கூட அப் 27ம் அதிகாரம் ஒரு பெரிய கப்பல் சேதத்தை மிகவும் துல்லியமாக விளக்குகிறது.
கப்பற் பிரயாணங்களில் விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத அந்த நாட்களில் காம்பஸ் கூட பயன்படுத்தப்படவில்லை. அவர்கள் தாங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கு துணையாக இருந்தது சூரியனும், நட்சத்திரங்களுமே. அநேக நாளாய் சூரியனையாவது, றட்சத்திரங்களையாவது காணவில்லை என்றால், அவர்கள் கப்பலை சரியான திசையில் ஓட்டிச் செல்ல முடியாது. எங்கே இருக்கறார்கள்? எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்? நடுக்கடலிலே வழியை தவற விட்டுவிட்ட கப்பல் அது.
பெரும் காற்று. மழை. சரக்குகளை கடலிலெ எறிந்தார்கள்.(18) கப்பலின் தளவாடங்களையும் தங்கள் கைகளினாலே எடுத்து கடலில் எறிந்தார்கள்.(19) பதினாலு நாட்களாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருந்தார்கள். (33) இனி தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கை முழமையும் அற்றுப் போயிற்று.

ஏன் கப்பற்சேதம்

இந்த பெருத்த சேதத்தைத் தவிர்த்திருக்க முடியும். தேவ மனிதனாகிய பவுலின் எச்சரிப்பை 10ம் வசனத்தில் காண்கிறோம்.
ஆனால் மாலுமி, கப்பல் எஜமான் அவர்களுடைய சொற்கள் பவுலின் வார்த்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டனவாயிருந்தது. (12) சாதகமான சூழ்நிலையான மெதுவான தென்றல் காற்று இதனை வலுப்படுத்தியது. பவுலினுடைய வார்த்தைகள்படி அல்ல மாலுமியின் வார்த்தைகளின்படி கப்பல் புறப்பட்டது. ஆனால் வெகுவிரைவில் ஒரு பெரிய ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
தேவமனிதர்களின் மூலமாக வெளிப்படும் தேவ ஆலொசனைகள் சூழ்நிலைகளுக்கு மாறாக, மனித ஞானத்திற்கு புறம்பாகத் தோன்றும். ஆனால் அதனை தள்ளி விடும்போது பெரிய சிக்கலான பிரச்சினைகளுக்குள் மாட்டித் தவிக்க நேரும்.
நினிவேக்கு செல்லும்படியாக தேவவார்த்தை பெற்ற யோனா அதற்கு கீழ்ப்படியாமல் தர்ஷிசுக்குக் கப்பல் ஏறினபோது கடலின் கொந்தளிப்பையும், பெரும் காற்றையும் சந்திக்க வேண்டியதாயிற்று. கடலின் ஆழத்தில் மீனின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் இருந்தது இயற்கைக்கு மாறுபட்ட மிகவும் அசெளகரியமான ஒரு அனுபவமே.
அதிகாலையில் தேவசமுகத்தில் காத்திருக்கும் பழக்கம் நாம் அன்றைய தேவைகளுக்காக தேவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுவதற்கான ஒரு நல்ல தருணம். தேவ மனிதர்களுடைய ஆலொசனைகளும் நமக்கு மிகவும் தேவை.
அடுத்து இப்படிப்பட்டதான பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருப்பது சாத்தானுடைய கிரியைகளே. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில், உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.(ரோமர் 1.13).
சாத்தான் தன் கையின் கீழ் வைத்துக் கொண்டிருக்கிற நாகரீக உலகமாகிய ரோமாபுரியை, வல்லமையான தேவனுடைய அப்போஸ்தலுனாகிய பவுல், உயிர்த்தெழுந்த இயேசுவின் பலத்தினாலும் வல்லமையினாலும் வந்து, சாத்தானுடைய இருளின் அதிகாரத்தை உடைப்பதை சாத்தான் விரும்பவில்லை. ஆகவே சாத்தான் எல்லாவிதத்திலும் தடை செய்தான். இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்ட எதிரான காற்று, புயல், இன்னமும் அநேக பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டே இருந்தான்.
சாத்தான் பின்னணியில் கிரியை செய்து கொண்டு இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் நம் வாழ்வில் எழும்பும் அநேக பிரச்சினைகள் ஏன் என்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியாது. கர்த்தர் அனுமதித்திருக்கிறார் என்பதும் நாம் நினைவில் வைக்க வேண்டிய மற்றொன்று.
கர்த்தர் எல்லா காற்றுகளையும் சாதகமாக்கியிருக்கக் கூடும். ஏன் அவ்வாறு செய்யவில்லை? ஒன்று இந்த சம்பவத்தின் மூலம் பவுலோடு பிரயாணம் செய்தவர்கள் இந்த கொடிதான சூழ்நிலையில் பவுலினிடத்தில் இன்னொரு வித்தியாசமான ஜீவியத்தைக் கண்டார்கள். உலக ஜீவியத்திலும் மற்றவர்களைக் காட்டிலும் வேறுபட்ட மேலான ஒன்று உண்டு என்பதை வெளிக்காட்டினார்.
எல்லாருக்கும் வந்த அதே கொடிய கப்பற்சேதத்திலும், விசுவாசத்தில் செயல்பட்ட இந்த மனிதனின் செய்கை உலக வழக்குக்கு முற்றும் மாறுபட்டதாக இருந்தது. மற்றவர்களைத் திடப்படுத்தியது. அவர்களைக் காப்பாற்றியது.
பவுலுக்கும் கூட நல்ல பாடமாக அமைந்தது. நெருக்கமான சூழ்நிலையிலும் கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதை ருசிபார்த்தார். விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்தார். தேவ கிருபையை உணர்ந்தார். பலவீனத்தில் விளங்குகிற தேவ வல்லமையை அனுபவித்தார். எனக்கு வரும் பலவீனங்களிலும் மேன்மை பாராட்டுகிறேன் என்பதே அவருடைய கூற்று. (2கொரி 12.9,10)
இறுதியாக யோபின் புத்தகம் விசுவாசிகள் வாழ்வில் குறுக்கிடும் இழப்புகள், சேதங்கள், பிரச்சினைகள் அனைத்திலும் எந்த ஒரு காரணத்தையும் சொல்ல முடியாவிட்டாலும், நாம் அறியாத தேவனை மகிமைப் படுத்தக் கூடிய தேவனுடைய ராஜ்யம் விரிவடையும்படியான ஜெயத்தை நமக்குக் கொண்டு வருகிறது என்பதனை விளக்குகிறது. யோபின் புத்தகம் தேவன், சாத்தான், என்ற மூன்று நபரோடு ஆரம்பித்த போதிலும் தேவனும் யோபுமாகிய இருவரோடு முற்றுப் பெறுகிறது. எல்லாமே பாதகமாக காணப்பட்ட போதிலும், எல்லாமே நன்றாக முடிந்தது.

இரகசியமான ஆயுதம்?

உன்னுடனே கூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயை பண்ணினார் (அப் 27.24).
தேவதூதனுடைய இந்த வார்த்தைகளை நாம் சற்று ஆழ்ந்து நோக்கினோமானால், பவுல் என்ன செய்திருந்திருப்பார் என்பது விளங்குகிறது. அவரோடிருந்தவர்களுக்காகவும், கப்பலாட்களுக்காகவும், போர்ச்சேவகர்களுக்காகவும், தன்னுடைய பயணத்தின் நோக்கங்கள் நிறைவேறவும் வேண்டிக் கொண்டார். கர்த்தர் அவர்ஜெபத்தைக் கேட்டு அவர்கள் ஜீவனை அருளினார்.
இந்த சம்பவம், ஒரு விசுவாசமுள்ள மனிதனிடத்திலிருந்து வெளிப்படும் அளவற்ற வல்லமையை வெளிப்படுத்துகிறது. இந்த சத்தியத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜெபம் என்கிற கருவியின் மூலமாக கர்த்தர் நம்மிடத்தில் ஒப்புவித்திருக்கிற வல்லமையின் அளவை நம்மில் ஒருவரும் அறியவில்லை என்று தான் புலப்படுகிறது. நாம் அவரிடத்தில் கேட்டால் மாத்திரம் போதும். அவர் நமக்காக வல்லமையாய் கிரியை செய்வார்.
யாக்கோபு அப்போஸ்தலன் (4.2) இவ்வாறாக தன் நிருபத்தில் எழுதியிருக்கிறார். நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்கு சித்திக்கிறதில்லை. தேவன் நம்முடைய எல்லா நினைவுகளுக்கும் மேலாக கொடுக்கும்படி காத்துக் கொண்டிருக்கிறார்.
திருச்சபைதான், பூமியின் இரகசிய அரசாங்கம். நம்மைச் சுற்றிலும் சம்பவிக்கும் எல்லா சம்பவங்களையும், செய்தித்தாளில் வெளிவரும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை அதற்கு உண்டு. நாமோ, இந்த காலங்களில் கடந்து போகிற சத்துவமற்ற வழிப்போக்கர்கள் என்றும் ஒருநாள் பரலொகத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுவோம் என்றும் நம்மைக் குறித்து எண்ணிக் கொள்ளுகிறோம்.
தேவவசனமோ நம்மை அப்படிப் படம் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் கட்டுப் படுத்தக் கூடிய திராணியுள்ளவர்கள் நாம். அவற்றில் எல்லாம் நமக்கு ஒரு நுண்ணிய பங்கும் உண்டு. ஆகையால் தான் யாக்கோபு 5.16-ல் நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளது என்று எழுதுகிறார். இங்கு ஒரு மனிதனுடைய ஜெபத்தின் மூலமாக அவனோடு பயணம் செய்த 275 பேருடைய உயிர்களும் பாதுகாக்கப் பட்டன. ஜெபத்தினால் பாதுகாக்கப் பட்டார்கள். என்னே ஜெபத்தின் வல்லமை!

திடப்படுத்தும் வார்த்தைகள்

நெருக்கத்தின் மத்தியில் விசுவாசிக்குக் கொடுக்கப் பட்ட உதவியை சற்றே கவனியுங்கள். மற்ற மனுஷஷர்களுக்கு உண்டான பயங்கரமான அழிவுக்கு பவுலும் உட்படுத்தப்பட்டார். ஆனால் சோதனையின் மத்தியில் கர்த்தருடைய வார்த்தை அவரை தைரியப் படுத்தி, பெலப்படுத்தினது.
பவுலை அந்த ஆபத்தினின்று வெளியே கொண்டு செல்லவில்லை. மற்றவர்களை விட புயலின் கொடுமை பவுலுக்கு சற்றும் குறையவில்லை. அபாயம் வெளியரங்கமாயிற்று. அலைகள் உயர்ந்தன. அந்தகாரங்களும் கொடியதாயிருந்தது. மற்றவர்களுக்கு இருந்த அதே நம்பிக்கையற்ற சூழ்நிலை பவுலுக்கும் உண்டாயிற்று. எல்லாருக்கும் சம்பவிப்பது பவுலுக்கும் நேர்ந்தது.
ஆயினும் உற்சாகமூட்டும் வார்த்தைகள். மற்றவர்களுக்கு இல்லாத ஒரு இரகசிய அறிவு. நெருக்கங்களும், அழுத்தங்களும் சற்றும் குறையாத நிலையிலும் உள்ளான திட நம்பிக்கை மற்றவர்களை விட்டு உயர்ந்து நிற்கவும், அவனை வித்தியாசப் படுத்தவும் செய்தது.
கிறிஸ்தவன் வித்தியாமன விதிமுறைகளுக்குள் செயல்படுகிறான். மற்வர்கள் துன்பங்களின் வழியாக செல்லும்போது வெளிக்காட்டுகிற பயம், திகில், சோர்வான முகம் ஆகியவை நம்மிடத்தில் பிரதிபலிப்பதில்லை.
ருட்யார்டு கிப்லிங் என்பவர் தன்னுடைய கவிதையில், எல்லாரும் செயலிழந்து நிதானமற்றவர்களாய் உன்னைக் குற்றப் படுத்தும் போது, உன்னால் தலை நிமிர்ந்து நடக்கக் கூடுமானால், என்று கிறிஸ்தவனின் மேன்மையைக் குறித்து எழுதுகிறார்.
சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாததனால் தான் கவலைப் படாமல் இருக்க முடிகிறது என்று குற்றப் படுத்துகிறார்கள். ஆனால் பவுலோ மற்ற எல்லாரைக் காட்டிலும் சூழ்நிலையை நன்றாக உணர்ந்தவனாய் நிமிர்ந்து நின்று மனுஷரே திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன் என்று முழங்குகிறார். இதுதான் விசுவாசம்.
கப்பலாட்கள் தந்திரமாய் கப்பலைவிட்டோட எத்தனிக்கையில், சரியான சமயத்தில் நூற்றுக்கதிபதியை எச்சரிக்கத் தவறவில்லை. இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்க மாட்டீர்கள்.(31) கர்த்தர் தான் வாக்குப் பண்ணியிருக்கிறாரே. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கண்சாடையாய் விட்டுவிடவில்லை. கர்த்தருடைய வாக்குத்தத்தத்தில் மனிதனுடைய கிரியைகளும் உள்ளடங்கியிருக்கிறது. மனிதனுடைய கிரியைகளின் மூலமாகவே கர்த்தர் தன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார். இது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நல்ல பாடம்.
நம்முடைய கைகளை முடக்கிக் கொண்டு, கர்த்தர் எப்படியாவது நிறைவேற்றுவார் என்று இருந்து விட முடியாது. நாம் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, நோக்கத்தை நிறைவேற்றும் சமயோசித புத்தியோடு செயல்படும்படியாக நம்மிடத்தில் எதிர்பார்க்கப் படுகிறது.
பதினான்கு நாட்களாக ஒன்றும் புசியாமல் பட்டினியாக இருந்தார்கள். பயத்தினாலும்,; கொடூரமான சூழ்நிலையினால் உண்டான அதிர்ச்சியினாலும் பசியற்றுக் காணப் பட்டார்கள். அவர்களுடைய ஆவியில் உண்டான சோர்வு அவர்களுடைய சரீரத்திலும் பெலவீனத்தை ஏற்படுத்தியிருந்தது.
பவுல் உங்கள் தலைமயிரிலிருந்து ஒன்றும் விழாது என்ற வார்த்தைகளினால், எல்லாரையும் திடப்படுத்துகிறார். அப்பத்தை எடுத்து எல்லாருக்கும் முன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து அதைப் பிட்டு புசித்தார். இச்செய்கையானது மற்றவர்களையும் திடப்படுத்தி, புசித்து பெலப்படச் செய்தது.
சோர்வூட்டும் சூழ்நிலைகள், சோர்ந்து போன ஜனங்கள் இவைகளின் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக செயல்பட்டார். அதன் விளைவாக எல்லாரும் திடப்படுத்தப் பட்டார்கள். ஒரு மனிதனுடைய இருதயத்தில் உண்டான நம்பிக்கை, உதட்டில் வெளியான திடப்படுத்தும் வார்த்தைகள் 275 பேருடைய மனநிலையையும் மாற்றி அவர்கள் சாப்பிட்டு சரீரத்தில் பெலுனடைந்து வரவிருந்த பழுவான வேலைக்கு அவர்களை தயார்ப்படுத்தியது. இதுவும் விசுவாசத்தின் வல்லுமையே.
இறுதியாக, புயலின் அகோரத்தின் ஊடாக கடந்து கரை சேர்ந்தார்கள். பவுல் சொன்னது போலு ஒரு உயிர்கூட மடிந்து போகவில்லை. எல்லாரும் தப்பிக் கரை சேர்ந்தார்கள்.
Related Media
See more
Related Sermons
See more
Earn an accredited degree from Redemption Seminary with Logos.