Untitled Sermon
ஜீவத்தண்ணீர் • Sermon • Submitted
0 ratings
· 48 viewsNotes
Transcript
Sermon Tone Analysis
A
D
F
J
S
Emotion
A
C
T
Language
O
C
E
A
E
Social
ஜீவத்தண்ணீர்
ஜீவத்தண்ணீர்
சுரேஷ் ராஜதுரை
ஒருக்காலும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார் (யோவான் 4:13-14)
இந்த உலகத்தில் எந்த பொருளும் நம் ஆத்தும தாகத்தைத் தீர்க்க முடியாது. இயேசு நம் இருதயத்தின் தாகத்தை என்றென்றும் திருப்திப்படுத்தும் ஒரு பானம் கொடுக்கிறார். பணத்தினால் வாங்க முடியாது. முற்றிலும் இலவசம். இயேசு கொடுக்கும் ஜீவ தண்ணீரை பருகி மகிழும்படியாக உங்களை அழைக்கிறேன்.
அறிந்திருந்தால்
அறிந்திருந்தால்
நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், .... (யோவான் 4:10)
யூதேயாவிலிருந்து கலிலேயா வரையான குறுகிய பாதை சமாரியா வழியாக இருந்தது, 70 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க இந்த பயணம் 2 1/2 நாட்களுக்கு எடுக்கும். பயணத்தின் களைப்பு (வ-6), நண்பகலின் வெயிலின் அகோரம், தாகம், பசி (சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே போயிருந்தார்கள்) இவைகளின் மத்தியில் இயேசு சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார். இந்த நிலையிலே இயேசுவை சந்தித்த சமாரிய பெண் இயேசுவை யார் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்ள இயலும்.
மிகவும் சாதாரணமான சூழலிலே, அற்பமாய் தோன்றுகிற மனிதர்களைக் கொண்டு கர்த்தர் நம்மை சந்திக்கிறார். இயேசு என்று அறியாமல் நழுவ விட்டு விட்ட தருணங்கள் எத்தனை எத்தனை!
· வ-9 இயேசுவை ஒரு யூதனாக அறிந்து, நீர் யூதனாயிருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
· வ-12 யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? என்றாள்.
· வ-19 ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன்
· வ-29 கிறிஸ்துதானோ என்றாள்.
· வ-42 அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
கிணற்றடியிலே தொடங்கிய சம்பாஷனை படிப்படியாக முன்னேறி அவள் மாத்திரமல்ல, அந்த ஊரிலுள்ள அநேகர் இயேசுவை யார் என்று அறிந்து கொண்டார்கள்.
கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்ற அறிவு அவளுக்கு இருந்தது. உன்னுடனே பேசுகிற நானே அவர் என்ற வெளிப்படுத்தலைப் பெற்றுக் கொண்டாள். (வ-26)
இயேசுவைக் குறித்து அதிகம் கேள்விப் பட்டிருக்கலாம். இயேசு எங்கோ தூரத்திலே அல்ல. உன் பக்கத்திலே உன்னுடனே பேசுகிறவராக அறிந்து கொள்ள மாட்டாயா?
கேட்டிருப்பாய்
கேட்டிருப்பாய்
நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், (யோவான் 4:10)
இயேசு இரண்டு அர்த்தங்களோடு பேசினார். நாம் அறியாத, விளங்கிக் கொள்ள முடியாத அரிய, பெரிய ஆவிக்குரிய காரியங்களை நமக்கு மிகவும் தெரிந்த சாதாரணமான காரியங்களைக் கொண்டு விளக்கினார். தண்ணீர் நாம் அறிந்த ஒன்று. நாம் கண்டிராத, நம்மால் கிரகிக்க முடியாத நம் சிந்தனைக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்ட ஆவிக்குரிய நன்மை ஜீவ தண்ணீர். நமக்கு அறிமுகமான உலகப் பொருட்களைக் கொண்டு ஆவிக்குரிய நன்மைகளை நமக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கேட்கும்படியாக அறிவுறுத்துகிறார். நிர்பந்திக்கிறார்.
ஜீவ தண்ணீரைக் குறித்து இயேசு பேசுகிறார், ஆனால் அவளுடைய சிந்தனை கிணற்றுத் தண்ணீரை விட்டு மாறவில்லை. ஆழமான கிணறு, இயேசுவிடத்தில் பாத்திரமில்லை. பின்னே எங்கே இருந்து ஜீவத்தண்ணீர் கிடைக்கும்?(வ-11) இந்த கேள்விகள் நியாயமானவைகளே. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு கூட எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை. இயேசு மறுபடியும் பிறப்பதைக் குறித்து பேசியபோது, தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோக என்ற கேள்வியை எழுப்புகிறான். (யோவா 3:4)
13-14 வசனங்களை கவனியுங்கள்
இந்தத் தண்ணீர்
குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
ஜீவ தண்ணீர்
நான் கொடுக்கும் தண்ணீர்
குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது;
அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாக ஊறுகிற நீரூற்று
அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாக ஊறுகிற நீரூற்று
இங்கே இயேசு கிணற்றுத் தண்ணீரிலிருந்து ஜீவ தண்ணீரை வேறுபடுத்திக் காண்பிக்கிறார். உலகத்திலுள்ள எந்த தண்ணீரும் நிரந்தரமாக தாகத்தை தீர்க்க முடியாது. அநுதினமும் ஆடம்பரமாய் வாழ்ந்துகொண்டிருந்த ஐசுவரியவானும் நித்தியத்திலே தாகமுள்ளவனாக காணப் பட்டான். விரலின் நுனியில் எவ்வளவு தண்ணிரை தோய்க்க முடியும். தன் நாவைக் குளிரப்பண்ணும்படி அதற்காக அங்கலாய்த்தான். (லூக் 16:24) இயேசு கொடுக்கும் தண்ணீரைத் தேடி வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை. நமக்குள்ளாகவே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்று அது.
அநேக கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் இருதயத்திலே ஜீவ தண்ணீரை எப்படியாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராவல் எழும்பிற்று. அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். (வ-15) நீயும் கூட ஜீவ தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும்படி இது உனக்கு ஒரு நல்ல தருணம்.
கொடுத்திருப்பார்
கொடுத்திருப்பார்
அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் (யோவான் 4:10)
தர வேண்டும் என்று கேட்டாள். பெற்றுக் கொண்டாளா? இயேசுவின் பதில் என்ன? நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். (வ-16) இந்த சம்பாஷனையில், ஒரு சில வார்த்தைகளில் முழு குடும்ப சரித்திரத்தையும், அந்தரங்கமான பாவ வாழ்க்கையையும் வெளிப்படுத்தினார்.
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்பதே அந்த பெண்ணின் சாட்சி. (வ-39) இயேசுவுக்கு முன்பாக எதையும் மறைக்க முடியாது. பாவ உணர்வும், மனந்திரும்புதலும் இல்லாமல் இரட்சிப்பு உண்டாகாது.
திரும்பவும் அப் 8;14-ல் சமாரியர் தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டதை வாசிக்கிறோம். அப் 8;16-17-ல் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம் செய்து, 17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
ஜீவத் தண்ணீராகிய பரிசுத்த ஆவியை நீ பெற்றுக் கொள்ள ஆயத்தமா?